/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி
/
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி
ADDED : ஜன 21, 2025 06:11 AM
ஓமலுார்: தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பெண், கார் மோதி உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்தவர் வள்ளி-யம்மாள், 55. இவர் பொங்கல் பண்டிகைக்காக, கருப்பூர் அருகே சாமிநாயக்கன்பட்டியில் உள்ள, தனது மகள் தமிழ்ச்செல்வி வீட்-டுக்கு வந்துள்ளார். நேற்று காலை, 9:30 மணியளவில் தனது ஊருக்கு செல்வதற்காக, அரசு பொறியியல் கல்லுாரி எதிரே உள்ள, சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை, வள்ளி-யம்மாள் கடக்க முயன்றார். அப்போது, சேலத்திலிருந்து தர்மபுரி நோக்கி சென்ற
கர்நாடகா பதிவெண் கொண்ட ேஹாண்டா கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே வள்ளியம்மாள் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கருப்பூர் போலீசார் போக்குவரத்தை
சீர்செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.