ADDED : டிச 31, 2024 07:37 AM
கெங்கவல்லி: மொபட் மீது, கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.
கெங்கவல்லி அருகே, கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி, 52. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் தனது மனைவி செல்லபாப்பு, 47, என்பவருடன், உலிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டில் சென்றார். அப்போது, உலிபுரம் வழியாக அதிவேகமாக வந்த டொயோட்டா கார், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் செல்லபாப்பு, அவரது கணவர் பொன்னுசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்லபாப்பு, நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.