ADDED : செப் 05, 2025 01:28 AM
மேட்டூர், மேட்டூர் அனல்மின் நிலையம் செல்லும் சாலையில், எம்.ஜி.ஆர்., பாலத்தில் இருந்து நேற்று மதியம், 2:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க பெண், காவிரியாற்றில் குதித்தார். அப்போது அதிகளவில் சென்ற தண்ணீர், அப்பெண்ணை இழுத்துச்சென்றது.
இதை அறிந்து, மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்பு, மீட்பு குழுவினர், மாதையன்குட்டையை சேர்ந்த மீனவர்கள், பரிசலில் சென்று, பெண்ணை மீட்டனர். ஆனால் அவர் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை கைப்பற்றிய, மேட்டூர் போலீசார், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரது தற்காலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
குளித்த டிரைவர் பலி
தாரமங்கலம் அருகே தொளசம்பட்டி, பொத்தியம்பட்டியை சேர்ந்த, வேன் டிரைவர் அருள்குமார், 34. இவர், நண்பர்களுடன் நேற்று, கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் மூழ்கிவிட்டார். நண்பர்கள், சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் வீரர்கள், ஆற்றில் தேடிய நிலையில், அருள்குமாரை சடலமாக மீட்டனர். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.