/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் சுயநினைவு இழந்த பெண் பலி
/
விபத்தில் சுயநினைவு இழந்த பெண் பலி
ADDED : ஜூன் 08, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தகரபுதுாரை சேர்ந்த விவசாயி குமார், 45. இவரது மனைவி கலைச்செல்வி, 36. இவர்கள் நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, உறவினர் வீட்டுக்கு, கெங்கவல்லி நோக்கி, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர்.
ஹெல்மெட் அணியாமல் குமார் ஓட்டினார். விஜயபுரம் பாலத்தில் ஏறியபோது, தடுமாறி விழுந்ததில் கலைச்செல்வி தலையில் படுகாயம் ஏற்பட்டு, சுய நினைவு இழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.