ADDED : நவ 06, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, தர்மபுரி மாவட்டம் மெனசியை சேர்ந்தவர் அனிதா, 23. சேலம் மாவட்டம் வாழப்பாடி, திருமனுாரை சேர்ந்த, பொக்லைன் ஆப்பரேட்டர் கார்த்திகேயன், 27. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, திருமனுாரில் உள்ள வீட்டில் அனிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து அனிதாவின் தந்தை முருகன், வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதில், 'கார்த்திகேயன், மது போதையில் மகள் அனிதாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் இறப்பில் சந்தேகம் உள்ளது' என கூறியிருந்தார். இதனால், போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் திருமணமாகி, 6 ஆண்டுகளே ஆவதால், சேலம் ஆர்.டி.ஓ., விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

