/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பெண் பலி
/
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பெண் பலி
ADDED : பிப் 17, 2024 07:13 AM
தலைவாசல் : தலைவாசல் அருகே கவர்பனையை சேர்ந்தவர் வெங்கடேசன், 30.
நெல் அறுவடை இயந்திர டிரைவர். இவரது மனைவி ஷாலினி, 26. இவர்களுக்கு, இரு ஆண் குழந்தைகள் உள்ளன. கடன் சுமை அதிமான நிலையில் கணவர் வேலைக்கு செல்லாததால், மனைவி கேட்டுள்ளார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஷாலினி, கடந்த, 11ல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். படுகாயமடைந்த அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நேற்று மாலை, அவர் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மணமான, 3 ஆண்டில் பெண் இறந்ததால், ஆத்துார் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்தனர். ஆனால் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, திருச்சி ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.