ADDED : ஜன 09, 2025 07:45 AM
ஏற்காடு: ஏற்காடு, கீரைக்காட்டை சேர்ந்த, 28 வயது பெண்ணுக்கு திரும-ணமாகி, இரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. தோட்ட வேலை செய்யும் பெண், கடந்த டிச., 27ல் பணி முடிந்து, புத்-துாரில் உள்ள தனியார் தோட்டம் வழியே நடந்து சென்றுகொண்-டிருந்தார்.
அங்கு சாலையோரம் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் உள்ளிட்ட அவரது நண்பர்கள், அப்பெண்ணிடம் தகாத முறையில் பேசி, கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தப்பிய பெண், வெளியூரில் பணிபுரியும் கணவரிடம், நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மறுநாள், கீரைக்காடு வந்து, முத்துக்குமாரிடம் கேட்-டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முத்துக்-குமார், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரது பைக்கை அடித்து சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவரையும் தாக்கியுள்ளார். 29 அன்று, ஏற்காடு போலீசாரிடம், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அளித்த புகார்படி, நேற்று, முத்துக்குமார் உள்பட, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடுகின்றனர்.

