/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முகமூடி அணிந்து வந்து பெண்ணிடம் நகை பறிப்பு
/
முகமூடி அணிந்து வந்து பெண்ணிடம் நகை பறிப்பு
ADDED : நவ 04, 2025 01:39 AM
சேலம், பெங்களூரு, மூன்றாவது மணி பாரதி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி மகாலட்சுமி, 56. இவர்கள் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக, பெங்களூருவில் இருந்து சேலம் வந்தனர். மகாலட்சுமி சகோதரர் நாகராஜ், சேலம் கொண்டலாம்பட்டி, இலைக்கடை சந்து வீதி பகுதியில் உள்ள சகோதரர் வீட்டில் வந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வெங்கடேஷ், மகாலட்சுமி ஆகியோர் கொண்டலாம்பட்டியில் இருந்து, சின்னப்பம்பட்டி பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, சுசூகி அசஸ் மொபட்டில் உத்தமசோழபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் ஆக்டிவா மொபட்டில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
நிலை தடுமாறிய மகாலட்சுமி, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி'காட்சிகளை வைத்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

