ADDED : நவ 04, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,  சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் புதிய பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பஸ்கள் வெளியே செல்லும் பொது கழிவறை பகுதியில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவரிடம், 1.100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையத்து அரிசிபாளையத்தை சேர்ந்த கோகுல் என்ற சச்சின், 19, என்பவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல்
செய்தனர்.

