/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபர்களிடையே மோதல் 4 பேர் காயம்; 8 பேரிடம் விசாரணை
/
வாலிபர்களிடையே மோதல் 4 பேர் காயம்; 8 பேரிடம் விசாரணை
வாலிபர்களிடையே மோதல் 4 பேர் காயம்; 8 பேரிடம் விசாரணை
வாலிபர்களிடையே மோதல் 4 பேர் காயம்; 8 பேரிடம் விசாரணை
ADDED : நவ 04, 2025 01:42 AM
சேலம், நசேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த அருண், இவரது நண்பர்கள் ஜெகதீஸ், பாரதி, சதீஷ் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, காரில் ஏற்காடு சென்று விட்டு மீண்டும் சேலம் திரும்பியுள்ளனர். 13வது வளைவில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென பிரேக் போட்டு நிதானமாக சென்றது.
இதனால் அருண் ஓட்டி வந்த கார், முன்னால் சென்ற கார் மீது மோதுவது போல சென்றதால், காரில் இருந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னால் சென்ற காரை ஓட்டி வந்த சேலம் கோட்டையை சேர்ந்த நுார்முகமது, தனது காரை மற்றொரு கார் பின் தொடர்வது குறித்து நண்பர்களிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் அடிவாரம் பகுதியில் கார் வந்ததும், நண்பர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அருண், ஜெகதீஸ், பாரதி, சதீஷ் ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கன்னங்
குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், நுார்முகம்மது காரில் வந்தவர்கள் மற்றும் சேலத்திலிருந்து வந்த அவரது நண்பர்கள், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தாக்குதல் நடத்திய, 8 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

