/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாய் கருமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
/
தாய் கருமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ADDED : நவ 04, 2025 01:44 AM
ஆத்துார், ஆத்துார், அம்பேத்கர் நகரில் உள்ள தாய் கருமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.
ஆத்துார், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தாய் கருமாரியம்மன் கோவிலில், கடந்த அக்., 27ல், சக்தி அழைத்தலுடன் தேர்த்திருவிழா துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீருடன் தீர்த்தக்குடம் ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று மாலை, 4:00 மணியளவில், 20 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரை, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் மற்றும் விழா குழுவினர், தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்துச் சென்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

