/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குளத்துக்கு பூட்டால் பெண்கள் பரிதவிப்பு
/
குளத்துக்கு பூட்டால் பெண்கள் பரிதவிப்பு
ADDED : பிப் 19, 2025 07:05 AM
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே சித்தர்கோவிலில், 7 நாழிக்கிணறு, ஒரு பெண்கள் குளம் உள்ளது. ஆனால் அந்த குளம், சில ஆண்டுகளாகவே பூட்டப்பட்டுள்ளதால், அங்கு வரும் பெண் பக்தர்கள் திறந்த வெளியில் உள்ள கிணறுகளில் குளிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் குளத்தில் உள்ள நீர் வெளியேறும் பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்தின் நீர் கெடுவதோடு, காளியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றுக்கும் இந்த நீர் கசிந்து வருகிறது. இதனால் அங்கு குளிக்கும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். அதனால் பெண்கள் குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேறவும், சில ஆண்டுகளாக பூட்டியுள்ள பெண்கள் குளத்தின் கேட்டை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'குளத்தில், 5 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. கேட்டை திறந்தால் சிறுவர்கள் கும்பலாக குதித்து விளையாடுகின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர், படிக்கட்டுகளில் அசுத்தம் செய்து விடுவதால் பூட்டி வைக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் மராமத்து பணி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.