/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பெண்கள்
/
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பெண்கள்
ADDED : ஏப் 20, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி:இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு காமராஜர் நகரில், 5 முதல், 18 வயது வரை உள்ள, 50க்கும் மேற்பட்ட சிறுமியர் மற்றும் கல்லுாரி மாணவியருக்கு சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது. பவித்ரா என்பவர் பயிற்சி அளிக்கிறார்.
பயிற்சி நடக்கும் இடம் அருகே உள்ள வீட்டில் வசிப்பவர், இங்கு சிலம்பாட்டம் நடத்தக்கூடாது என கூறி, சிறுமிகளை திட்டியதாக புகார் எழுந்தது.
இதனால் பவித்ரா, சிறுமிகளின் தாய்மார்கள், நேற்று இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பின், சிறுமிகளை வீடியோ எடுத்ததாக, பவித்ரா புகார் கொடுத்தார். போலீசார் இரு தரப்பிலும் விசாரித்து சமாதானப்படுத்தி அனுப்பினர்.

