/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்கலாம்: பா.ம.க., நிறுவனர் எதிர்பார்ப்பு
/
பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்கலாம்: பா.ம.க., நிறுவனர் எதிர்பார்ப்பு
பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்கலாம்: பா.ம.க., நிறுவனர் எதிர்பார்ப்பு
பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்கலாம்: பா.ம.க., நிறுவனர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 29, 2025 07:18 AM
சேலம்: ''பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்க முடியும். உங்கள் ஓட்டுகளை, பா.ம.க.,வுக்கு அளித்தால் தீர்வு கிடைக்கும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
சேலத்தில், பா.ம.க.,வின், மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம் வரவேற்றார். சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் தலைமை வகித்தார். அதில், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தினமும் தைலாபுரம் தோட்டத்தில், நுாற்றுக்கணக்கானவர்களை சந்திக்கிறேன். தற்போது உங்களை நேரில் பார்க்க வருகிறேன். மற்ற மாவட்டங்களை நேசித்தாலும், தர்மபுரி, சேலம் மாவட்டத்தை அதிகம் நேசிக்கிறேன். ஒரு காசு செலவு செய்யாமல், பணக்காரர்களுக்கு கிடைக்கும் தரமான கல்வியை அனைவருக்கும் வழங்குவது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை, பா.ம.க., வைத்துள்ளது. அனைத்து சமூகத்தினரும் அவரவருக்குரிய இட ஒதுக்கீட்டை பெற்று, மகிழ்ச்சியான மாநிலமாக தமிழகம் மாற வேண்டும்.
கள்ளுண்ணாமை குறித்து, திருவள்ளுவர் ஒரு அதிகாரமே இயற்றியுள்ளார். ஆனால், இன்று அரசே, சந்து, பொந்துகளில் கூட சாராயத்தை விற்கிறது. போதை பொருள் எங்கும் கிடைக்கிறது. இதை ஒழித்துவிட்டால் வருமானம் என்னாவது என்கின்றனர். அதற்கான மாற்று வழிகளை ஒரு புத்தகமாகவே, பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறோம். மும்மூர்த்திகள் வந்து என்னிடம் வரம் கேட்டால், மழைநீர் கடலில் வீணாக கலக்கக்கூடாது, மதுவை ஒழிக்க வேண்டும், கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என வரம் கேட்பேன்.
எல்லா மக்களும் பா.ம.க.,வை வன்னியர்களுக்கான கட்சி என தவறாக புரிந்து கொள்கின்றனர். இது அனைவருக்குமான கட்சி. பெண்கள் நினைத்தால் மதுவை ஒழிக்க முடியும். உங்கள் ஓட்டுகளை, பா.ம.க.,வுக்கு அளித்தால் தீர்வு கிடைக்கும். தேர்தல் முடிந்து, இங்கு நடக்கும் வெற்றி கூட்டத்திலும் நான் பங்கேற்பேன். இவ்வாறு அவர் பேசினார். தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் மணி, மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ., சதாசிவம் உள்பட பலர் பேசினர். திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

