/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மாறுபட்ட இதய துடிப்புக்கு ஆளான பெண்கள் கதிரியக்க சிறப்பு சிகிச்சையால் குணமடைந்தனர்'
/
'மாறுபட்ட இதய துடிப்புக்கு ஆளான பெண்கள் கதிரியக்க சிறப்பு சிகிச்சையால் குணமடைந்தனர்'
'மாறுபட்ட இதய துடிப்புக்கு ஆளான பெண்கள் கதிரியக்க சிறப்பு சிகிச்சையால் குணமடைந்தனர்'
'மாறுபட்ட இதய துடிப்புக்கு ஆளான பெண்கள் கதிரியக்க சிறப்பு சிகிச்சையால் குணமடைந்தனர்'
ADDED : நவ 22, 2024 01:34 AM
'மாறுபட்ட இதய துடிப்புக்கு ஆளான பெண்கள்
கதிரியக்க சிறப்பு சிகிச்சையால் குணமடைந்தனர்'
சேலம், நவ. 22-
சேலம் அரசு மருத்துவமனையில், இருதயவியல் துறை மருத்துவர்கள், 'அரித்மியா' எனும் மாறுபட்ட இதய துடிப்பு பாதிப்புக்கு ஆளான இரு பெண்களுக்கு, கதிரியக்க சிறப்பு சிகிச்சை முறையில் சரி செய்ததாக, டீன் தெரிவித்தார்.
இதுகுறித்து, சேலம் அரசு மருத்துவமனை டீன் தேவி மீனாள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சோபனேஸ்வரி, 30, ராதிகா, 40. இவர்கள் சீரற்ற இதய துடிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, 8 மாதங்களாக மாத்திரை சாப்பிட்டு வந்தனர். அவர்களுக்கு அடிக்கடி படபடப்பு, தலைசுற்றல், மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன.
இந்நோயால் சாதாரணமாக, 1 நிமிடத்துக்கு, 60 முதல், 100 வரை துடிக்க வேண்டிய இதயம், 150 முதல், 200க்கு மேல் துடிக்கும். அவர்களுக்கு பிற்காலத்தில் இருதய செயலிழப்பு ஏற்படலாம். இந்நிலையில் இருவருக்கும் கடந்த, 19ல் நோய் தன்மை கண்டறியப்பட்டு, அதை கதிரியக்க சிறப்பு சிகிச்சை மூலம் முழுதுமாக குணமடைய செய்துள்ளோம். குறிப்பாக இருதயவியல் குழு, எல்க்ட்ரோ பிஸியாலஜி பரிசோதனை, கதிரியக்க சிறப்பு சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இருவரும் இனி மாத்திரை உட்கொள்ள தேவை இல்லை. மீண்டும் இந்நோய் அறிகுறி வராமல் இருக்கும். இத்தகைய நவீன சிகிச்சை முறை மேற்கொண்ட இருதய துறை மருத்துவ குழுவுக்கு பாராட்டுகள். இந்த சிகிச்சை, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இச்சிகிச்சைக்கு, 2 முதல், 3 லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், இருதய துறைத்தலைவர் கண்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.