/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் உரிமைத்தொகை பிடித்தம்; சுயஉதவிக்குழு பெண்கள் சரமாரி புகார்
/
மகளிர் உரிமைத்தொகை பிடித்தம்; சுயஉதவிக்குழு பெண்கள் சரமாரி புகார்
மகளிர் உரிமைத்தொகை பிடித்தம்; சுயஉதவிக்குழு பெண்கள் சரமாரி புகார்
மகளிர் உரிமைத்தொகை பிடித்தம்; சுயஉதவிக்குழு பெண்கள் சரமாரி புகார்
ADDED : ஜன 28, 2025 07:15 AM
சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் காலனியை சேர்ந்த பெண்கள் பலர் மனு கொடுக்க, நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். தடுத்து நிறுத்திய போலீசாரிடம், அவர்கள் கூறியதாவது:
கடந்த, 2000ம் ஆண்டு முதல், களஞ்சியம் மகளிர் குழுவில், 200 பேர் உறுப்பினராக உள்ளோம். நாங்கள் இதுவரை செலுத்திய கடன் விபரத்தை, குழு நிர்வாகிகள் சிவராணி, காமாட்சி, வள்ளி ஆகியோர் தர மறுக்கின்றனர். எங்களின் வீட்டு பட்டாவை வாங்கி வைத்து கொண்டதோடு, ஆதாரையும் வங்கியில் வைத்து முடக்கிவிட்டனர். நாங்கள் நிலுவைக்கடனை செலுத்த தயாராக உள்ளோம். ஆனால், அதற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினரின் வரவு-செலவு கணக்கை, தனித்தனியாக வெளியிட வேண்டும். மகளிர் உரிமைத்தொகை, குழந்தைகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை, கடன் நிலுவையை காரணம் காட்டி, தன்னிச்சையாக பிடித்தம் செய்து கொள்கின்றனர். தற்போது உறுப்பினர்கள் தலா, 5 லட்ச ரூபாய் கடனை செலுத்த வேண்டும் எனவும், அரிசி, பருப்பு மார்க்கெட்டிங் செய்து, 20,000 ரூபாய்க்கு விற்றுத்தர நெருக்கடி தருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு சென்றனர். குழு நிர்வாகி சிவராணி கூறுகையில், ''எங்களால், எப்படி வட்டியை தள்ளுபடி செய்ய முடியும். மற்றபடி அவர்கள் சொல்வதில் உண்மை இல்லை,'' என்றார்.

