ADDED : டிச 23, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, விளையாட்டு போட்டிகள் பல்வேறு கல்லுாரிகளில் நடந்து வருகி-றது.
இரண்டு நாள் நடைபெறும், மகளிர் ஹாக்கி போட்டி நேற்று சேலம் பத்மவாணி கல்லுாரியில் துவங்கியது. அதில், சக்தி-கைலாஷ், ஏ.வி.எஸ்., சோனா என மொத்தம், 7 கல்லுாரிகளை சேர்ந்த வீராங்கனை பங்கேற்றனர். இன்று இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.

