/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி: பெண்கள் மனு
/
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி: பெண்கள் மனு
ADDED : ஜூலை 01, 2025 01:31 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மனு அளிக்க வந்தனர். அப்போது போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, கோரிக்கைகளை எழுதி தரும்படி கூறினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது:
சேலம் சொர்ணபுரி அருகே, தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு வீட்டு உபயோக பொருட்கள் தவணை முறையில் வழங்கி வந்தனர். பின்னர், பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக தெரிவித்தனர்.
இதை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தோம், ஆனால் இரட்டிப்பு பணம் தரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன், அந்த நிறுவனம் போலியானது என தெரியவந்ததையடுத்து, நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் எங்களது பணத்தை திரும்ப பெற முடியவில்லை. ரூ. 1 லட்சம், 10 லட்சம், 20 லட்சம் என பலரிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்துள்ளோம். புகார் அளிக்க வந்த எங்களை, தனியார் மண்டபத்திற்கு வேனில் போலீசார் அழைத்து சென்றனர். அங்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஒவ்வொருவரிடமும் தனியாக புகார்களை பெற்று கொண்டனர்.
இவ்வாறு கூறினர்.