ADDED : பிப் 12, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: அ.தி.மு.க.,வின், ராஜ்யசபா எம்.பி., தம்பி துரை, ஆத்துார், பைத்துார் ஊராட்சி கல்லுக்கட்டு மலை கிராமத்தில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, 5.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதற்கான பூமி பூஜை விழா, கல்லுக்கட்டில் நேற்று முன்தினம் நடந்தது. ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தார். ஒன்றிய செயலர் சேகர், ஒன்றிய ஜெ., பேரவை செயலர் சதாசிவம் உள்-பட பலர் பங்கேற்றனர்.
