/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழை நீரை சேமிக்க குளம் இடம் தேர்வு பணி தீவிரம்
/
மழை நீரை சேமிக்க குளம் இடம் தேர்வு பணி தீவிரம்
ADDED : டிச 20, 2024 01:06 AM
பனமரத்துப்பட்டி, டிச. 20-
பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஜருகுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை பகுதியில் உற்பத்தியாகும் மழை நீர், ஓடை வழியாக வெளியிடங்களுக்கு செல்கிறது.
கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், மழை நீரை தேக்கி வைக்க குளம், குட்டை, ஏரி இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மூலம், குளம் வெட்டுவதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நேற்று, காட்டு வளவு பகுதியில் நான்கு குளம் தோண்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில், ஒன்றிய பொறியாளர், பஞ்சாயத்து அலுவலர்கள் ஈடுபட்டனர்.இதன் மூலம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். நிலத்தடி நீர் மட்டம் மேம்பட வாய்ப்பு உள்ளது.