/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர் நிலைகளில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி துவக்கி வைப்பு

ADDED : ஜூலை 01, 2025 01:16 AM
ஓமலுார், ஊராட்சி குளம், ஏரிகளில், 4 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், முத்துநாயக்கன்பட்டி நைனத்தால் ஏரியில் துவக்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைக்கு சொந்தமான குளம், ஏரியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய அறிவிப்பு வெளியானது. அத்திட்டத்தின் கீழ், ஓமலுார் ஒன்றியம், முத்துநாயக்கன்பட்டியில் உள்ள நைனத்தால் ஏரியில், நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 20 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டு இருப்பு செய்தார்.
ரோகு, கட்லா, மிர்கால் ஆகிர ரக மீன்குஞ்சுகள் விடப்பட்டன. சேலம், ஓமலுார் ஆகிய பகுதியில் உள்ள எட்டு ஏரிகளில், நேற்று இரண்டு லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இன்று இரண்டாவது நாளாக சேலம் மற்றும் வீரபாண்டி, அயோத்தியாபட்டணம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள நீர் நிலைகளில், 2 லட்சம் மீன் குஞ்சகள் இருப்பு செய்யப்
படவுள்ளது.
கலெக்டர் பிருந்தாதேவி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமாகலைச்செல்வி, ஓமலுார் பி.டி.ஓ., உமாசங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபால்சாமி, குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர்.