ADDED : பிப் 28, 2024 07:37 AM
கொளத்துார் : கொளத்துாரில் இருந்து, 15 வயது சிறுமி, கடந்த, 24 மாலை, தனியார் பள்ளி பஸ்சில் வீடு திரும்பினார். அப்போது அவரை, பைக்கில் வந்த, 3 பேர் கேலி செய்தனர். மறுநாள் இரவு, மாணவியை கேலி செய்தவர்கள், கருங்கல்லுாரில் உள்ள பேக்கரிக்கு சென்றனர். அப்போது அங்கு சென்ற சிறுமியின் உறவினர்கள், அந்த, 3 பேரையும் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த கிழக்கு காவேரிபுரம் காலனியை சேர்ந்த கட்டட தொழிலாளி மயில்சாமி, 21, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு தரப்பினர் மோதல் தொடர்பாக, காவேரிபுரத்தில் பதற்றம் நிலவியது. மோதலை தடுக்க, இரு நாட்களாக கருங்கல்லுார், காவேரிபுரம், கிழக்கு காவேரிபுரம், சத்யாநகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தாக்குதல் தொடர்பாக, கருங்கல்லுாரை சேர்ந்த குமார், 29, ரத்னகுமார், 28, ஆகியோரை நேற்று முன்தினம், கொளத்துார் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பிய மயில்சாமியை நேற்று, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

