/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஞ்., அலுவலகத்தை உடைத்து சேதமாக்கிய தொழிலாளி கைது
/
பஞ்., அலுவலகத்தை உடைத்து சேதமாக்கிய தொழிலாளி கைது
ADDED : ஆக 05, 2025 01:05 AM
மேட்டூர், பஞ்., அலுவலகத்தின் கதவுகளை, போதையில் செங்கல்லால் உடைத்து சேதப்படுத்திய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர், கொளத்துார் ஒன்றியம், லக்கம்பட்டி ஊராட்சி கட்டட தொழிலாளி பிரபாகரன், 29. இவர் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு வழக்கத்தை விட அதிகளவில் மது அருந்தியுள்ளார். பின்பு அங்குள்ள, லக்கம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றுள்ளார். திடீரென ஆவேசமடைந்த அவர் செங்கல், ஹாலோபிரிக்ஸ் கற்களால் பஞ்., அலுவலகம் மற்றும் கோப்புகளை வைத்துள்ள தனி அறை ஆகியவற்றின் கதவுகள் மீது வீசினார்.
இதில், இரு கதவுகளும் உடைந்து சேதமானது. அதனை தொடர்ந்து மீண்டும் செங்கற்களை கொண்டு வந்து அலுவலகத்துக்குள் வீசியுள்ளார். இதனால் அங்கிருந்த சேர், கோப்புகள் உள்பட மொத்தம், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. மேலும், அருகில் இருந்த வி.ஏ.ஓ., அலுவலகத்தின் கதவுகள் மீதும் செங்கல்லை வீசினார்.
இந்நிலையில் நேற்று, ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., (கி.ஊ) நல்லதம்பி கொளத்துார் போலீசில் அளித்த புகார்படி, பிரபாகரனை கைது செய்தனர்.