/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூட்டியிருந்த வீட்டில் திருடிய தொழிலாளி கைது
/
பூட்டியிருந்த வீட்டில் திருடிய தொழிலாளி கைது
ADDED : அக் 17, 2024 02:57 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய தொழிலாளியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இடைப்பாடி தாலுகா, பக்கநாடு, குண்டுமலைகாடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 46. விவசாய கூலி வேலை செய்கிறார். கடந்த, 14ல் இவருயை வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டுள்ளது. இது குறித்து பழனியப்பன் கொடுத்த புகாரயடுத்து, பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமாகாத கட்டட வேலை செய்யும் கொத்தனார் முருகன், 19, திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 2 பவுன் நகை, ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.