/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலை துண்டித்து தொழிலாளி கொலை; உடலை தேடும் போலீசார்
/
தலை துண்டித்து தொழிலாளி கொலை; உடலை தேடும் போலீசார்
தலை துண்டித்து தொழிலாளி கொலை; உடலை தேடும் போலீசார்
தலை துண்டித்து தொழிலாளி கொலை; உடலை தேடும் போலீசார்
ADDED : ஜன 10, 2025 07:14 AM
கிருஷ்ணகிரி: தளி அருகே, தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை, போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்துள்ளது கும்ளாபுரம். நேற்று முன்தினம் இரவு கும்ளாபுரம் குளத்தின் அருகே ஆண் ஒருவரின் தலை, எரிந்த நிலையில் கிடந்தது. தளி போலீசார் சம்பவ இடம் சென்று, விசாரணை நடத்தியதில், எரிந்த நிலையில் கிடந்தவர் கும்ளாபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஷான்பாஷா, 55, என தெரிந்தது. தலையை கைப்பற்றிய போலீசார், அவரின் உடலை தேடி வருகின்றனர். விசாரணையில், ஷான்பாஷாவின் மனைவி, 20 ஆண்டுகளுக்கு முன் தனியாக சென்று விட்டதும், தற்போது, தன் சகோதரி மம்தாவின் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது-. அவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கமுள்ள அவர் கடந்த, 15 நாட்களாகவே காணவில்லை என, தெரியவந்துள்ளது.