ADDED : டிச 26, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், டிச. 26-
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் களிமேடு பகுதியில் வசித்து வந்தவர் அந்தோணி
ராஜ், 60, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, தாராபுரம் காங்கேயம் ரோடு களிமேடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, தாராபுரத்தில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த அரசு பஸ் அந்தோணிராஜ் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அந்தோணிராஜ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.