ADDED : செப் 16, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, சங்ககிரி, தேவூர் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார், 34. சென்ட்ரிங் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, 'ஸ்டார் சிட்டி' பைக்கில், புளியம்பட்டி பரிசல் துறையில் உள்ள நண்பர் கார்த்திக் வீட்டுக்கு சென்றார்.
பின் நண்பருடன் தேவூர் புறப்பட்டார். ஹெல்மெட் அணியாமல் கார்த்திக் ஓட்டினார். அண்ணமார் கோவில், மலை
முழுங்கி பள்ளம் அருகே வந்தபோது, எதிரே வந்த, ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மீது மோதியது. இதில் உதயகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.