/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
/
டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ADDED : நவ 26, 2024 01:31 AM
டிராக்டரிலிருந்து தவறி
விழுந்த தொழிலாளி பலி
ஜலகண்டாபுரம், நவ. 26--
டிராக்டரிலிருந்து கீழே விழுந்து, செங்கல் சூளை தொழிலாளி உயிரிழந்தார்.
ஓமலுார், செலவடையை சேர்ந்தவர் சின்ராஜ், 40, செங்கல் சூளை தொழிலாளி. திருமணமாகவில்லை. நேற்று மதியம், 2:30 மணிக்கு சின்ராஜ், தனது செங்கல் சூளை உரிமையாளர் பரமசிவத்துடன், ஜலகண்டாபுரம் நோக்கி டிராக்டரில் சென்றார். பரமசிவம் ஓட்ட, சின்ராஜ் அருகில் டிராக்டர் மட்கார்டில் அமர்ந்திருந்தார். வெண்ணாம்பட்டி புளியமரத்துகொட்டாய் என்ற இடத்தில், அதிவேகமாக சென்ற டிராக்டரிலிருந்து சின்ராஜ் தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சின்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.