ADDED : அக் 17, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்; தலைவாசல், மும்முடியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 65. கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, அதே பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது தெரியாமல், பழைய பாட்டில்களை எடுக்க முயன்றார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். மக்கள் அவரை மீட்டு, தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது
தெரியவந்தது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
