ADDED : ஆக 03, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த தொழிலாளி கார்த்திக், 20. இவர் நண்பர்களுடன், நேற்று மதியம் மேச்சேரி அடுத்த, எம்.காளிப்பட்டி ஏரிக்கு குளிக்க சென்றார். ஏரி நிரம்பி இருந்த நிலையில் நீச்சல் தெரியாத கார்த்திக் மூழ்கி விட்டார். அவரது நண்பர்கள், மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே நங்கவள்ளி, மேட்டூர் தீயணைப்பு குழுவினர், 30க்கும் மேற்பட்டோர் வந்து, மாலை, 4:00 முதல் இரவு, 7:00 மணி வரை தேடியும், கார்த்திக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதால், மீட்பு பணியை ஒத்திவைத்து இன்று தேட முடிவு செய்தனர்.