/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரடிகள் தாக்கியதில் தொழிலாளி படுகாயம்
/
கரடிகள் தாக்கியதில் தொழிலாளி படுகாயம்
ADDED : செப் 19, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கீழ்நாடு ஊராட்சி, கிராங்காட்டை சேர்ந்தவர் ஜெயராமன், 50. ஆவாரை கிராமத்தில் உள்ள மகள் வீட்டுக்கு நேற்று மதியம், 12:30 மணிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
ஆவாரை மலைப்பாதையில், இரு கரடிகள் நின்றிருந்தன. இதனால் பைக்கை நிறுத்தி, ஜெயராமன் இறங்க முயன்றார். அப்போது, இரு கரடிகளும் தாக்கத்தொடங்கின. அவர் கூச்சலிட, அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து கரடிகளை விரட்டினர். படுகாயம் அடைந்த ஜெயராமனை, ஆத்துார் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆத்துார் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

