/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழாய் இணைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளி மொபைல் கம்பம் சாய்ந்து 'கிளாம்ப்' குத்தி பலி

ADDED : மே 07, 2025 02:01 AM
சேலம்:சேலம், சீலநாயக்கன்பட்டி, ஒன்பதாம்பாலி, ராமசாமிக்காட்டை சேர்ந்த, முத்துசாமி மகன் பெரியண்ணன், 30. இவரது மனைவி நாகேஸ்வரி. இவர்களது மகள்கள் தயாஸ்ரீ, 11, தேவஸ்ரீ, 9, மோனிகாஸ்ரீ, 7.
தனியார் நிறுவனத்தில் பெரியண்ணன் பணிபுரிந்தார். அவரது நிறுவனம், மணியனுாரில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு மேட்டூர் குடிநீர் குழாய் இணைக்கும் பணிக்கு, நெத்திமேடு, குடம்பக்காட்டில் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பணியில் பெரியண்ணன், சித்தன், 50, உள்ளிட்டோர் நேற்று ஈடுபட்டிருந்தனர். குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது, குழியில் இருவர் இறங்கி, 'பைப்'பில், 'வெல்டிங்' வைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அருகே இருந்த, தனியார் மொபைல் நிறுவன கம்பம் சாய்ந்து, பெரியண்ணன், சித்தன் மீது விழுந்தது. அதில் கம்பத்தில் இருந்த, 'கிளாம்ப்' பகுதி, பெரியண்ணன் நெஞ்சில் குத்தியது. அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் உயிரிழந்தார். கால் முறிவு ஏற்பட்ட சித்தன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'பெரியண்ணன் மனைவி நாகேஸ்வரி ஓராண்டுக்கு முன் கேன்சர் நோயால் உயிரிழந்தார். பெரியண்ணன் தந்தை முத்துசாமி விபத்தில் உயிரிழந்துவிட்டார். தற்போது பெரியண்ணனும் இறந்ததால், 3 பெண் குழந்தைகள் பரிதவிக்கின்றனர்' என்றனர்.