ADDED : ஜன 17, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காணும் பொங்கலையொட்டி, சேலம், கருப்பூர் அருகே செங்கரடு செம்பு மாரியம்மன் கோவில் பகுதியில் எருதாட்டம் நேற்று நடந்தது.
சேனைக்கவுண்டனுார் காட்டு வளவை சேர்ந்த, கட்டட தொழிலாளி வேடியப்பன், 35, எருதாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு காளை, அவரை முட்டியது. வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, மாமாங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டார். இறந்த தொழிலாளிக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
எருதாட்டம் நிறுத்தம்
கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி, உலிபுரம், கொண்டையம்பள்ளி, தெடாவூர், கெங்கவல்லி, கூடமலை, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி ஆகிய கிராமங்களில் அனுமதியின்றி எருதாட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.