/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாய் கடித்ததால் பலியான தொழிலாளி 'ரேபிஸ்' பாதிப்பில்லை என விளக்கம்
/
நாய் கடித்ததால் பலியான தொழிலாளி 'ரேபிஸ்' பாதிப்பில்லை என விளக்கம்
நாய் கடித்ததால் பலியான தொழிலாளி 'ரேபிஸ்' பாதிப்பில்லை என விளக்கம்
நாய் கடித்ததால் பலியான தொழிலாளி 'ரேபிஸ்' பாதிப்பில்லை என விளக்கம்
ADDED : ஆக 24, 2025 12:37 AM
ஆத்துார்,சேலம் மாவட்டம் ஆத்துார், மந்தைவெளியை சேர்ந்த முத்து மகன் தர்மன், 35; கூலி தொழிலாளி. வீட்டில் நாய் வளர்த்து வந்தார். ஓராண்டுக்கு முன் தர்மனை, அந்த நாய் கடித்தது. வளர்ப்பு நாய் என்பதால் சிகிச்சை எடுக்காமல் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு உடல் நலம் பாதித்ததால், ஆத்துாரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவிக்கு பின், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். நாய் கடிக்கு சிகிச்சை பெறாததால் தர்மன் இறந்ததாக தகவல் பரவியது.இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் தேவிமீனாள் கூறுகையில், ''ஓராண்டுக்கு முன் நாய் கடித்ததாக கூறுகின்றனர். அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இல்லை. மூளையில் ஏற்பட்ட பாதிப்பால்
உயிரிழந்தார்,'' என்றார்.