ADDED : ஏப் 19, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி:சேலம் அடுத்த, அதிகாரிப்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி சுப்ரமணி, 40. இவரது நண்பர் தங்கம். இவர்கள், களரம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்றனர். மீண்டும் அதிகாரிப்பட்டி நோக்கி, மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகரில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மொபட்டை நிறுத்திவிட்டு இயற்கை உபாதைக்கு சுப்ரமணி சென்றுவிட்டு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத பைக் மோதியதில், சுப்ரமணி படுகாயம் அடைந்தார். அவரை, தங்கம் மீட்டு மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

