/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் - லாரி மோதி தொழிலாளி பலி; 2 பேர் 'சீரியஸ்'
/
பைக் - லாரி மோதி தொழிலாளி பலி; 2 பேர் 'சீரியஸ்'
ADDED : அக் 26, 2024 07:07 AM
பவானி: சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் சோனு, 22, தமிழ், 26; சேலம், முத்தநாயக்கன்பட்டி எல்லாயூரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 33. இவர்கள் மூவரும் கட்டட தொழிலாளர்கள்.
கோயம்புத்துாருக்கு வேலைக்கு சென்ற மூவரும், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, 'யமஹா எப்.இசட்.,' பைக்கில் சேலத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இரவு, 9:30 மணிக்கு, ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமிநகர் மேம்பாலத்தில் டூ-வீலரை நிறுத்திவிட்டு ஓரமாக நின்றிருந்தனர்.
அப்போது, அதிவேகமாக வந்த டேங்கர் லாரி, மூவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த மூவரையும், அப்பகுதியினர் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சோனு இறந்தார். மற்ற இருவரும் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.