ADDED : ஆக 08, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், மந்தைவெளியை சேர்ந்தவர் டேவிட், 42. கோழி இறைச்சி கடையில் தொழிலாளியாக பணிபுரிந்தார்.
நேற்று காலை, 6:40 மணிக்கு, டி.வி.எஸ்., பைக்கில், மந்தைவெளியில் இருந்து, காமராஜர் சாலைக்கு செல்லும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆத்துாரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற விழுப்புரம் கோட்ட அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் டேவிட் உடல் நசுங்கி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.