ADDED : செப் 24, 2026 01:31 AM

வாழப்பாடி: வாழப்பாடி, சேசன்சாவடியை சேர்ந்த, கூலித்தொழிலாளி ஆறுமுகம், 60. நேற்று காலை, 8:30 மணிக்கு வேலைக்கு சைக்கிளில், சேசன்சாவடி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது தளவாய்பட்டியை சேர்ந்த சிவச்சந்திரன், 26, சேலத்தில் இருந்து ஆத்துார் நோக்கி ஓட்டி வந்த, ஹோண்டா கார், ஆறுமுகம் மீது மோதியது. அவர் சம்பவ இடத்தில் உயிரி-ழந்தார். வாழப்பாடி போலீசார், ஆறுமுகம் உடலை கைப்பற்றி, சிவச்சந்திரனிடம் விசாரிக்கின்றனர்.
காயம் அடைந்தவரும் பலி
தாரமங்கலம், பவளத்தானுார் சுந்தரன்காட்டை சேர்ந்த கூலித்தொ-ழிலாளி மாரக்காள், 65. கடந்த, 18ல் வேலைக்கு சென்று விட்டு, மாலை, 5:45 மணிக்கு, அத்திக்கட்டானுார் பிரிவில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது தாரமங்கலம் பக்கமிருந்து, 'பஜாஜ்' பைக்கில் வந்தவர் மோதியதில், மாரக்காள் படுகாயம் அடைந்தார். மக்கள், அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ
மனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம்
உயிரிழந்தார்.
