/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லுாரி பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு
/
கல்லுாரி பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு
ADDED : நவ 20, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முத்து, 60. கூலித்தொழிலாளியாக பணிபுரிந்த இவர், நேற்று மாலை, 6:30 மணிக்கு, பேளூர் பிரிவு சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆத்துார் நோக்கி சென்ற, தனியார் கல்லுாரி பஸ், முத்து மீது மோதியது. இதில் அவர், உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முத்து மகன் அழகரசன் புகார்படி, வாழப்பாடி போலீசார், பஸ் டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.

