ADDED : ஏப் 28, 2025 07:10 AM
சேலம்: ஆட்டையாம்பட்டி, நாவலர் காலனியை சேர்ந்தவர் முருகேசன், 60. கூலித்தொழிலாளியான இவர், நேற்று காலை, 11:30 மணிக்கு, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கிருந்து ஒரு பஸ்சில் செல்ல, அரசு பஸ் பின்புறம் நின்றிருந்தார். அப்போது, அதன் டிரைவர் பஸ்சை பின்னோக்கி இயக்கியபோது, முருகேசன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், பயணியர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் உயிரிழந்தார். சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
சேலம், வீராணம் அருகே மோட்டூரை சேர்ந்தவர் மாரி, 60. நேற்று, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., ஹெவி டியூட்டி மொபட்டில், ஹெல்மெட் அணியாமல், சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மதியம், 3:30 மணிக்கு, வீராணம் பிரதான சாலையில், நாச்சிமுத்து காட்டன் மில் பகுதியில் மொபட்டை திருப்பியுள்ளார். அப்போது வந்த இருசக்கர வாகனம், மாரி மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மாரி விழுந்தார். அப்போது வந்த அடையாளம் தெரியாத கார், மாரி மீது ஏறியதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.