ADDED : பிப் 03, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த, சலுான் தொழிலாளி கருணாநிதி, 41.
இவர், மகள் காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், சகோதரர் கண்ணனின் மனைவி சாந்தியை கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்த நிலையில் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலையில், கண்ணனின் மகன் விக்னேஷ், 23, கடந்த, 31ல் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவல்படி, கண்ணனின் தாய்மாமா விஜயகுமார், 45, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மற்றொரு உறவினரை, போலீசார் தேடுகின்றனர்.

