ADDED : நவ 22, 2026 01:24 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்:ஆத்துார், கடைவீதியை சேர்ந்தவர் வேலு, 45. பாத்திர கடையில் பணிபுரிகிறார். திருமணம் செய்து கொள்ளாத இவர், கடந்த, 9 இரவு, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த, 8, 9, 10 வயதுடைய மூன்று சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
சிறுமிகளின் பெற்றோர், வேலுவை பிடித்து, 'கவனிப்பு' செய்து, ஆத்துார் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். பின் ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டது.காயம் அடைந்திருந்ததால் வேலுவை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் அவர் தலைமறைவானார். பின் சிறுமியின் பெற்றோர் புகார்படி, நேற்று, ஆத்துார் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் நேற்று, வேலுவை கைது செய்தனர்.
