நாலெட்ஜ் கல்லுாரியில் அறிவுத்திறன் போட்டி யுனிவர்சல் பள்ளி மாணவர்கள் சாம்பியன்
நாலெட்ஜ் கல்லுாரியில் அறிவுத்திறன் போட்டி யுனிவர்சல் பள்ளி மாணவர்கள் சாம்பியன்
UPDATED : நவ 22, 2026 02:19 AM
ADDED : நவ 22, 2026 01:23 AM

சேலம்: பள்ளி மாணவ, மாணவியரின் கலை, அறிவியல் திறன்களை ஊக்குவிக்க, சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், 'கே.ஐ.ஓ.டி., அறிவும் அறிவியலும் - 2026' தலைப்பில், ரோபோட்டிக்ஸ், ஓரிகாமி உள்பட, 10 வகையான போட்டிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.
கல்லுாரியில் உள்ள, ஐ.எஸ்.டி.இ., ஐ.இ.இ.இ., - எஸ்.ஏ.இ., - ஜே.சி.ஐ., - ஐ.சி.டி., - ரோட்ராக்ட், யு.எஸ்.ஜி.பி.சி., போன்ற அமைப்புகள் மூலம் நடத்தப்பட்டது.
சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 20 பள்ளிகளில் இருந்து, 8 முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், தனித்திறமைகளை வெளிப்
படுத்தினர். இடைப்பாடி யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர். அப்பள்ளிக்கு கோப்பை, மடிக்கணினி வழங்கப்பட்டன. நெய்க்காரப்பட்டி ஸ்ரீவித்யபாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள், 2ம் இடம் பிடித்தனர். அனைத்து பள்ளிகளின் சிறந்த மாணவர்களுக்கும், 'சைனிங் ஸ்டார்' விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி அறக்கட்டளை சார்பில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் விசாகவேல், நிறுவனர் சீனிவாசன், செயலர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார், இயக்குனர்கள், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், அனைத்து பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
