/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போராட்டத்துக்கு பலன் பணியில் தொழிலாளர்கள்
/
போராட்டத்துக்கு பலன் பணியில் தொழிலாளர்கள்
ADDED : பிப் 17, 2024 07:13 AM
ஓமலுார் : சேலம், கருப்பூரில், 'இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின், சமையல் காஸ் நிரப்பும் ஆலையில் சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட, 65 ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தில் இணைந்தனர்.
இதனால் முதல்கட்டமாக, 10 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, பின் அனைவரையும் பணிக்கு அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் மீண்டும் வேலை கேட்டு, ஆலை முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சேலம் மாவட்ட தொழிலாளர் துறையினர், ஆலை நிர்வாகத்திடம் பேச்சு நடத்தினர். இதனால் நேற்று, சஸ்பெண்ட் செய்யப்பட்ட, 10 பேரை தவிர, மற்ற, 55 பேரும் பணியில் இணைந்தனர். மற்றவர்களும் பணியில் இணைய, பேச்சு நடத்தப்படும் என, சி.ஐ.டி.யு., சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.