/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாய கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு
/
விவசாய கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு
ADDED : ஆக 28, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி அருகே முண்டாச்சியூர் காட்டுவளவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 47. திருமணம் ஆகாத இவர், கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். அருகே உள்ள முப்பனுாரில், அக்கா பொன்னுதாயி, 60, வீட்டில் தினமும் சாப்பிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் காலை, சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றார். நேற்று காலை சாப்பிட வரவில்லை எனக்கூறி பொன்னுதாயி, அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தார். தொடர்ந்து தேடியபோது, கள்ளுக்கடையில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து பொன்னுதாயி புகார்படி, சடலத்தை கைப்பற்றி, பூலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.