/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியவர் கைது
/
போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியவர் கைது
ADDED : ஆக 28, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜேந்திரன், ஒரு போலீசார், அதே பகுதியில், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உணவு டெலிவரி செய்பவர், மொபட்டில் ஹெல்மெட் அணியாமல், மொபைல் போனில் பேசியபடி ஓட்டிச்சென்றார்.
இதை பார்த்த ரோந்து வாகன டிரைவர், மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து அந்த டெலிவரிமேன் கேட்டு தகராறு செய்துள்ளார். தொடர்ந்து ரோந்து வாகன சைடு கண்ணாடியை உடைத்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், சீரகாபாடி, ஏரக்காட்டை சேர்ந்த தியாகராஜன், 36, என தெரிந்தது. பின் அவரை கைது செய்தனர்.