நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சீலநாயக்கன்பட்டி, கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி, 44. நேற்று முன்தினம் சன்னியாசிகுண்டு - எருமாபாளையம் சர்வீஸ் சாலையில் பைக்கை நிறுத்தினார்.
அப்போது பைக்கில் வந்த, 3 பேர் கும்பல், கருப்புசாமியிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் இல்லை என கூறியதால், அவரை தாக்கிவிட்டு, 500 ரூபாய், மொபைல் போனை பறித்துச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த கருப்புசாமி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.