/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊரக வேலை பணி வழங்காததால் தொழிலாளர்கள் சாலை மறியல்
/
ஊரக வேலை பணி வழங்காததால் தொழிலாளர்கள் சாலை மறியல்
ADDED : செப் 21, 2024 06:49 AM
தலைவாசல்: ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததால், 100க்கும் மேற்-பட்ட தொழிலாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரையை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலை திட்ட தொழிலா-ளர்கள், நேற்று காலை, 11:20 மணிக்கு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப்பில், சாலை மறி-யலில் ஈடுபட்டனர். தலைவாசல் பி.டி.ஓ., இளங்கோ, போலீசார் பேச்சு நடத்தினர்.
தொழிலாளர்கள், 'பல மாதங்களாக, தேசிய ஊரக வேலை திட்-டப்பணிகள் தேர்வு செய்யாமலும், பணிகள் வழங்காமலும் உள்-ளனர். பணி வழங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.இளங்கோ, 'கடந்த ஜூனில் குளம் எடுக்கும் பணிக்கு இடம் தேர்வு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வரு-வாய்த்துறையினருக்கு
ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இடத்தை ஒப்படைக்காததால் பணி மேற்கொள்ள முடி-யவில்லை. இருப்பினும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார். இதையடுத்து காலை, 11:50 மணிக்கு தொழிலாளர்கள் கலைந்து
சென்றனர்.தொடர்ந்து மாவட்ட மக்கள் குறைதீர் அலுவலர் காந்திமதி, ஊரக வேலை திட்ட தொழிலாளர்களிடம் விசாரித்தனர்.