/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கலால் திரும்பிய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விசைப்படகில் பயணம்
/
பொங்கலால் திரும்பிய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விசைப்படகில் பயணம்
பொங்கலால் திரும்பிய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விசைப்படகில் பயணம்
பொங்கலால் திரும்பிய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விசைப்படகில் பயணம்
ADDED : ஜன 13, 2025 03:03 AM
மேட்டூர்: மேட்டூர் அணை கரையோர கிராமங்களை சேர்ந்த பலரும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடும்பத்துடன் பணிபுரிகின்றனர். அவர்கள், பொங்கல் கொண்டாட பண்ணவாடி வந்து, விசைப்படகில் பயணித்து சொந்த ஊர் சென்றனர்.
சேலம் மாவட்டம் கொளத்துார் அடுத்த பண்ணவாடி, கோட்-டையூர், செட்டிப்பட்டியில் இருந்து மேட்டூர் அணை மறுக-ரையில் உள்ள தர்மபுரி மாவட்டம், நாகமறை, ஒட்டனுார், ஏம-னுாருக்கு விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் தர்ம-புரி மாவட்டம் அணை கரையோர கிராமங்களில் வசிக்கும் வியா-பாரிகள், மக்கள், விசைப்படகில் மேட்டூர் அணையை கடந்து சேலம் மாவட்டத்துக்கு செல்வர்.
அதுதவிர மேட்டூர் அணை கரையோர கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டடம், ஆயத்த ஆடை தயாரிப்பு உள்பட பல்வேறு வேலை செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர், குடும்பத்துடன் வேலை செய்து, அதன் ஆலைகள் அருகே வசிக்கின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாட, நேற்று ஏராள-மான தொழிலாளர்கள், குடும்பத்துடன் பண்ணவாடிக்கு வந்-தனர். அங்கிருந்து அணை மறுகரையில் உள்ள நாகமறை செல்லும் விசைப்படகில் ஏறி, சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் இருசக்கர வாகனங்களையும் விசைப்படகில் கட்டியுள்ள பெரிய பரிசலில்
ஏற்றிச்சென்றனர்.