/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு
/
உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு
ADDED : பிப் 22, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் : அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும்படி, பிப்., 21, சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ, 1999ல் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில், உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நேற்று நடந்தது. துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை வகித்தார். அதில், துணைவேந்தர் உறுதி
மொழியை வாசிக்க, மாணவ, மாணவியர்,
பேராசிரியர்கள், அலுவலர்கள் ஏற்றனர்.
அதேபோல் பனமரத்துப்பட்டி அருகே குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், குழந்தைகளுக்கு தாய்மொழியின் சிறப்பு, முக்கியத்துவம் குறித்து, தமிழ் ஆசிரியர் தெய்வநாயகம் விளக்கினார்.